மாந்திரீக பயிற்சி

காளி வசிய தீக்ஷை & மாந்திரீக பயிற்சி 👉ஶ்ரீ மகா காளி உபாசனை மற்றும் மயான காளி தீக்ஷை.✋✋✋✋✋✋✋ ரிஷிகள் மற்றும் நம் முன்னோர்கள் நம் நன்மைக்காக சில வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். அவர்கள் உறைப்படி ஸக்தி வழிப்பாட்டை மையமாகக் கொண்ட ஸாக்த மதத்தில் உபதேசிக்கப்பட்ட தசமஹாவித்யைகளாகிய காளி, தாரா, சுந்தரி, பைரவி, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகீ, மாதங்கி, கமலாத்மிகா ஆகிய வித்தைகளில் முதன்மை யான வித்தையான காளி வித்தையே மிகச் சிறந்தது என்று பறிந்துரத்துள்ளனர். காளிமாதாவை சித்தகாலி, மகாகாளி, குஹ்யகாளி, பத்ரகாளி, ரக்தகாளி, ஸ்மசானகாளி, ரக்ஷாகாளி, தக்ஷிணகாளி என பல ஸ்வரூபங்களில் வழிபடுகிரார்கள். வழிபடும் முறை ஒவ்வொன்றிற்கும் வேறுபடுகிறது. இந்த மூர்த்தி பேதங்களுள் ஸுக்த சத்துவ பிரதான லக்ஷண ஸ்வரூபம் கொண்ட உபாசநைக்கு மிகவும் ஏற்ற மூர்த்தி ஸ்ரீ தக்ஷிண காளிகையே என்று நிர்ணயித்துள்ளார்கள். தக்ஷினகாளிகைக்கு பவதாரிணீ என்ற சிறப்பு நாமமும் உண்டு. இந்த உலகத்தை ஆள்பவள் என்று பொருள். கலியுகத்தில் நம்மை காக்க உள்ள கருணாமூர்த்தி. ...