குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை

குட்டி சாத்தான் வசிய மந்திரம் மிகவும் இரகசியமாக இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது. பல மாந்திரீகர்கள் இதை இன்றும் பயன் படுத்துகின்றார்கலாம்.

பலரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்த அரிய மந்திரமான குட்டி சாத்தான் வசிய மந்திரத்தையும் வழிமுறைகளையும் வெளியிடுகின்றேன்.

வெள்ளிக்கிழமை இரவு மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது நதியில் ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடிந்து இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு கீழ்காணும் மந்திரத்தை ஜெபிக்கவேண்டும். நாற்பத்தெட்டு நாட்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இம்மந்திரத்தை ஜெபிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே சாப்பிட வேண்டும், அதுவும் தாமாகவே சமைத்து சாப்பிட வேண்டும். யாருடனும் பேசுவதோ, தாம்பத்திய உறவுகளோ கூடாது. தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து அதில் தான் படுத்துறங்க வேண்டும்.

குட்டிசாத்தான் வசிய மூலமந்திரம்

‘ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி
சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும்
என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை,
சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா  ‘.

இதை தினமும் 1008 முறை என நாற்பத்தெட்டு நாட்கள் ஜெபிக்கவேண்டும்.

குட்டி சாத்தான் உங்களை தேடி வந்துவிட்டார் :

மேலே சொன்னதை முறைப்படி செய்திருந்தால், நாற்பத்தெட்டாவது நாள் ஒரு சிறு மனித ரூபம்  விபூதி பையும், பிரம்பும் கொண்டு வரும்.உங்கள் கண்களுக்கு நன்றாகவே புலப்படும்.

அந்த சிறு மனித ரூபம் வந்து நீங்கள் பூஜை செய்யும் குளத்தின் ஓரமாய் தன் விபூதி பையையும்,பிரம்பையும் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி ஸ்நானஞ்செய்வது போல் இறங்கும். அந்த சமயத்தில் பயப்படாமல் சீக்கிரம் மேற்படி சென்று பையையும்,பிரம்பையும் எடுத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் போய் நின்று கொண்டால், இக்குட்டி சாத்தான் அவ்வளவு சலத்திலிறங்காமல் விபூதி பையையும்,பிரம்பையும் கொடுவென்று கேட்கும். அப்போது நீங்கள் “நான் நினைக்கும் போதெல்லாம் வந்து நான் வேண்டுங்காரியங்களைத் தடையின்றி செய்வதாகச்
சிவன் மீது ஆணையிட்டுக் கொடு” என்று சொல்ல வேண்டும். அது ஆணையிட்டு கொடுத்த பின் விபூதி பையையும், பிரம்பையும் கொடுத்து விடவும். பின்னர் இது நம்முடனே இருக்கும். இக்குட்டி சாத்தான் மந்திரசித்தி பெற்றவரின் கண்ணுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்க்கு தெரியாது.

குறிப்பு : தாம் எதை சாப்பிட்டாலும் தனக்கு பின்புரம் உள்ள சாத்தானுக்கு காட்டி விட்டு தான் சாப்பிடவேண்டும். அப்படி செய்யாதவரை குட்டி சாத்தான் என்ன செய்யும் என்பது சொல்ல முடியாதவொன்று. அனால் அவர் தங்களுடன் இருக்கும் வரை இதை கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும்.

இந்த முறையை விடவும் எளிமையான முறைகளும் உள்ளது.
தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

சுடலை மாடன் வசிய முறை ( உபாசனை )

ஜின்னை வசியம் செய்யும் முறை