குறளியை வசியம் செய்யும் முறை

நவரத்தினம்,பொன்,பொருள்,பழங்கள், முதலியவை ,திண்பண்டங்கள் என பலவற்றையும் நமக்கு கொண்டு வந்து தரும் இந்த குறளியை பண்டைய காலத்தில் பலரும் சித்தி செய்து ஜால வித்தைக்கு பயன்படுத்தி வந்தனர்.
குறளி வித்தை என்ற வார்த்தையை பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
சரி குறளி வசியம் செய்யும் முறையை காணலாம்.
இந்த முறையை குரு இல்லாமல் முயற்சி செய்ய வேண்டாம்.
இதற்கு சாதம், கோழிக்கறி குழம்பு, சாராயம், கச்சை கருவாடு, பழம், பானகம்,இளநீர், வாசனையான பூக்கள்,சாம்பிராணி, பத்தி,சூடம், தேங்காய், பழம்,வெற்றிலை பாக்கு, வைத்து மயானத்தில் மந்திரம் செபிக்க சித்தியாகும்.

மூலமந்திரம் :

அரி அரி பகவான் ஆனந்த பகவான்
அர அர சிவ சிவ அம்பிகை துணையே
ஓம் நமோ பகவதே உத்தண்ட பகவதே
உருதேரிய குழந்தை வா வா
உபசரணை பண்ணும் உகப்பான தாயே வா வா
ஒரு கையில் பந்தும் ஒரு கையில் செம்பு
ஒரு கையில் சூலமும் இப்படி பல பல
காரண காட்சிகள் காட்டும் கண் கட்டும்
களரி விளையாடும் காரணக்குறளி வா வா
குறளி வா வா நான் நினைத்த புஷ்பம்
பொன்காசு பூதலம் மெய்க்கப் புதுமைகள் காட்ட
தன்கையாலெடுத்து என் கையில் தருவாய்
தங்கக்காசு உன்னுடைய சிங்காரம்
சிறுவேல் விழியும் மாகண விரிப்பும்
அதுமேல் விரிப்பும் பொற்காவடியும்
பூமாலை சூடும் ஆகாச சிங்காதனத்திலிருந்து
வா வா தாயே வரந்தருந்தாயே
வந்து என்முன்னின்று என் சொல்லைக்கேட்டு
என் வசமாக நிற்க சுவாஹா.

இந்த மந்திரத்தை 128 உருச்செபிக்க சித்தியாகும்.

இதில் சூட்சுமம் மறைக்கப்பட்டுள்ளது.

Comments

Post a Comment

Popular posts from this blog

சுடலை மாடன் வசிய முறை ( உபாசனை )

ஜின்னை வசியம் செய்யும் முறை

குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை