கடன் தொல்லையா ? இதோ தீர்வு



கடன் தொல்லையில் இருந்து விடுபட சக்தி வாய்ந்த எளிய தாந்த்ரீக பரிகாரம்

கடன் ஒரு மனிதனின் வாழ்கையை புரட்டி போடும் சக்தி வாய்ந்தது

அவசர தேவைக்கு வாங்கிய பணம் பல மடங்கு குட்டி போட்டு பெருகி பெரும் தொகையாக நிற்க்கும் வாங்கிய பணத்தை திருப்பி தரமுடியாத நிலை வருவதற்க்கு நீங்கள் பணம் வாங்கிய ஹோரைகள் தான் முக்கிய காரணம் சுப ஹோரையில் பணம் வாங்கினால் சிரமபடாமல் சீக்கிரம் வாங்கிய கடனை அடைக்க முடியும் இனி நீங்கள் அவசர தேவைக்கு பணம் வாங்கினால் சுப ஹோரையில் வாங்கவும்

சரிங்க இப்ப வாங்குன கடனை எப்படி அடைப்பது அதுக்கு வழி சொல்லுங்கனு நீங்க சொல்றது எனக்கு கேட்க்குது

இந்த சக்தி வாய்ந்த எளிய பரிகாரம் சீக்கிரம் உங்கள் கடனை அடைப்பது உறுதி

நல்ல சுத்தமான பசு வெண்ணெய் வாங்கி முதல் நாளே ப்ரிசரில் வைத்து அடுத்த நாள் அந்த வெண்ணெய்யில் பிள்ளையார் பிடித்து ஒரு கண்ணாடி கப் அல்லது குழி தட்டில் வைத்து  குங்கும திலகமிட்டு வினாயக பெருமானை மனதார வேண்டிகொன்டு 108 நாள் உங்களால் முடிந்த ஏதாவது ஒரு நைவேத்யம் செய்து வெண்ணெய் வினாயகரை வழிபட உங்கள் கடன் தீர்க்கும் வழி விரைவில் கிடைக்கும் அவரவர் கர்மவினையை பொருத்து பலன் சீக்கிரமாகவும் அல்லது தாமதமாவோ கிடைக்கும் ஆனால் நிச்சய பலன் உண்டு என்னை நேரில் சந்தித்த நிறைய நண்பர்களுக்கு இந்த பரிகாரம் சொல்லி பலன் அடைந்து உள்ளார்கள்

108 நாளுக்கு வெண்ணெய் தாங்காது உருகிவிடும் அப்படி உருகும் வெண்ணெய்யை வினாயகருக்கே விளக்கேற்றி விடவும் மீண்டும் புது வெண்ணெய்யில் பிள்ளையார் பிடிக்கவும்


Comments

Popular posts from this blog

சுடலை மாடன் வசிய முறை ( உபாசனை )

ஜின்னை வசியம் செய்யும் முறை

குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை