பந்தயம் ,போட்டியில் வெற்றி பெற


நமது கலாச்சாரங்களில் பணம், பொருள் போன்றவற்றை பணயமாக வைத்து ஆடப்படும் ஆட்டங்கள் அனைத்தும் ஒரு பாவத்திற்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது. பாண்டவர்கள், கௌரவர்களிடம் தங்களின் நாடு, சொத்து, சுகம் போன்ற அனைத்தையும் இழந்து “மகாபாரத போர்” உருவானதற்கு காரணமே இந்த சூதாட்டம் தான். இந்த சூதாட்டங்களில் மக்கள் யாரும் ஈடுபடுவதை சித்தர்கள் ஊக்கப்படுத்துவதில்லை என்றாலும், அவற்றில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைத்து “தனலாபம்” உண்டாவதற்கு ஒரு தாந்த்ரீக பரிகார முறையை கூறியிருக்கின்றனர் அது என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

பழங்காலங்களில் நமது நாட்டில் தாயம் விளையாட்டில் பணம், பொருள் போன்றவற்றை பணயமாக வைத்து விளையாடும் சூதாட்ட விளையாட்டுகளே அதிகம் இருந்தன. ஆனால் காலங்கள் பல கடந்து தற்போதைய நவீன காலங்களில் “சீட்டாட்டம், குதிரை பந்தயம், லாட்டரி, கேசினோ” போன்ற பலவகையான பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகள் தோன்றியிருக்கின்றன.


மேற்சொன்ன விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாடுவதற்கு முன்பு மிருகசீரிட நட்சத்திர தினத்தன்று, புளிய மரத்தில் வளர்ந்திருக்கும் புல்லுருவி செடிக்கு காப்பு கட்டி, தீபாராதனை காட்டி, அச்செடியினை பறித்து, ஒரு மஞ்சள் நிற நூலில் கட்டி, உங்களின் வலது கையில் காப்பு கட்டிக்கொண்டு “சீட்டாட்டம், பந்தயம், லாட்டரி” போன்றவற்றில் ஈடுபடும் போது நீங்கள் அவற்றில் வெற்றி பெற்று மிகுந்த தன லாபத்தை பெறும் அதிர்ஷ்டம் உண்டாகும்.

Comments

Popular posts from this blog

சுடலை மாடன் வசிய முறை ( உபாசனை )

ஜின்னை வசியம் செய்யும் முறை

குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை