செய்வினை வைத்துள்ளார்களா என்பதை கண்டறிய எளிய வழி


யாராவது செய்வினை வைத்துள்ளார்களா என்று அறிவது எப்படி, அதை நிவர்த்தி செய்யும் வழிமுறை.....

ஒரு மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்து கண்காணியுங்கள். தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போய்விடும். தீயசக்தி இல்லையென்றால் அவை வாடாது.

எலுமிச்சை மாலை செய்து உங்கள் வீட்டருகில் இருக்கும் துர்கா தேவிக்கு மாலையாய் போடச் சொல்லுங்கள். பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்திருங்கள், ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்திருந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை. ஆனால் அந்த எலுமிச்சைப் பழம் அழுகிப் போயிருந்தால் தீய சக்தி அந்த இடத்தில் நிலவுகிறது என அர்த்தம்.

பரிகாரம் :-
மாதிரியான இக்கட்டான சமயத்தில் வடக்கு அல்லது கிழக்குத் திசையில் ஒரு மண் விளக்கில் வேப்பெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றியபிறகு எல்லா ஜன்னல் மற்றும் வீட்டுக் கதவுகளை மூடிவிட வேண்டும்.
ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிகிறதா என பாருங்கள். ஒரு வாரம் கழித்து நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை சமமாக எடுத்து தீபம் ஏற்ற வேண்டும்.பூஜையறையில் ஏற்றினால் நல்லது. 3 மாதங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

நல்ல நேர்மறை மற்றும் திட மனது இருப்பவர்களிடம் செய்வினை பலிக்காது.

வீட்டில் துளசிச் செடியிருந்தால் அந்த செய்வினை வைத்தவரை நோக்கி திரும்பிவிடும்.

தினமும் காயத்ரி மந்த்ரம் சொல்பவர்களிடம் நெருங்காது.

செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. 
இதோ அதன் செய்முறை :-

 வ.எண் பொருட்கள் அளவு :-

1. வெண்கடுகு 250 கிராம்.

2. நாய்க்கடுகு 250 கிராம்.

3. மருதாணி விதை 250 கிராம்.

4. சாம்பிராணி 250 கிராம்.

5. அருகம்புல் பொடி 50 கிராம்.

6. வில்வ இலை பொடி 50 கிராம்.

7. வேப்ப இலை பொடி 50 கிராம்.

மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.  இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை.  எங்கும் தேடி அலைய வேண்டாம்.  சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சுடலை மாடன் வசிய முறை ( உபாசனை )

ஜின்னை வசியம் செய்யும் முறை

குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை