சகல தோஷங்களும் நீங்கி வெற்றி மேல் வெற்றி பெற

வெற்றி மேல் வெற்றி பெற ரகசியம் 

ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் வெற்றி பெற ரகசிய பிரயோக முறை 



அஸ்வினி -எட்டி 
பரணி- நெல்லி
கிருத்திகை -அத்தி 
ரோகிணி - நாவல்
மிருக சீரீடம் - கருங்காலி
திருவாதிரை -செங்கருங்காலி
புனர்பூசம் -மூங்கில்
பூசம் - அரசு
ஆயில்யம் -புன்னை
மகம் - ஆலமரம்
பூரம் - பலா
உத்திரம் -அலரி
அஸ்தம் -வேலமரம் 
சித்திரை- வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுசம் - மகிழம்
கேட்டை - புராய்மரம்
மூலம் - மாமரம்
பூராடம் - வஞ்சி 
உத்திராடம் - பலாமரம்
திருவோணம் - எருக்கமரம்
அவிட்டம் -வன்னி
சதயம் - கடம்பு
பூரட்டாதி - தேமா
உத்திரட்டாதி -வேம்பு
ரேவதி - இலுப்பை


உலக மக்கள்தொகை எத்தனை ஆயினும் அத்தனை பேரும் 27 நட்சத்திரத்துக்குள் அடக்கம். உங்கள் பிறந்த நட்சத்திரம் என்பது உங்கள் உயிரினை போன்றது. ஜோதிட ரீதியாக உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை வணங்கினாலே சகல தோஷங்களும் விலகும் என்பதனை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில் இந்த மரங்களை நட்டு பராமரித்து வந்தனர்.
இந்த ஒவ்வொரு விருட்சமும் மனித வாழ்வில் என்னற்ற பலன்களை தருகின்றன. இதன் மருத்துவ குணங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. இந்த விருட்சங்களின் ஈர்ப்பு சக்தியும், காந்த சக்தியும், தெய்வீகத் தன்மையும் அளப்பறியது.
இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது இறைவனுடன் இணைந்து வாழ்வதாகும், இந்த விருட்சங்கள் வெளியிடும் காற்றை சுவாசித்தாலே உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இவ்விருட்சங்களின் கீழ் அமர்ந்து தியானித்தாலே மனம் ஒடுங்கி தியானம் கைக்கூடும். சர்வ சித்திகளும் அடையலாம். புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பதும், அரச மரத்தினடியில் வினாயகர் அமர்ந்திருப்பதும் இவ்வுண்மையை விளக்குவதாகும்.
நட்சத்திர தோஷ விருட்ச பரிகாரம் :
 உங்கள் ஜெனன நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு நவதானியத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை ஊறவைத்த தண்ணீரை விருட்சத்திற்கு ஊற்றி பரிகாரம் செய்து, பின் ஊறிய தானியத்தை வெல்லம் போட்டு அறைத்து பசுவுக்கு கோபூஜை செய்து உண்ண கொடுத்து பசுவை மூன்று முறை வலம்
வந்து வணங்க தோஷங்கள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

Comments

Popular posts from this blog

சுடலை மாடன் வசிய முறை ( உபாசனை )

ஜின்னை வசியம் செய்யும் முறை

குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை